தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக இருதய நோயாளர்களின் எண்ணிக்கை 40 சதவீதம் வரை அதிகரித்தது.


தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி

 காரணமாக இருதய நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதயநோய் நிபுணர் வைத்தியர், கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார்.


இதன்படி, மேல் மாகாணத்தில் மாத்திரம் பதிவாகும் இருதய நோயாளர்களின் எண்ணிக்கை 30 தொடக்கம் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.


இந்த நிலைமையை புரிந்துணர்வுடன் எதிர்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.