6ஆம் திகதி ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கவேண்டுமாயின் 3 கோரிக்கைகள் முன்வைப்பு

எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள ஹர்த்தால் போராட்டத்திற்கு, ஆதரவு வழங்கவேண்டுமாயின், சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களிடம், 3 கோரிக்கைகளை முன்வைக்க இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.


அரசதுறை தொழிற்சங்கங்கள் சம்பளம் பெற்றுக்கொள்ளாமல், இந்த ஹர்த்தால் போராட்டத்தில் பங்கேற்க இணக்கம் தெரிவிப்பது, அத்துடன், கனியவளக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபை உள்ளிட்ட அரச நிறுவனஙகள் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் நிபந்தனை விதித்துள்ளது.

 

இது குறித்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு எழுத்துமூலம் அறிவிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களுக்கு எழுத்துமூலம் அறியப்படுத்த உள்ளதாக கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை, 6ஆம் திகதி முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள ஹர்த்தால் போராட்டத்திற்கு பேருந்து சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, தொழிற்சங்க மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Tags