சாய்ந்தமருது குண்டுவெடிப்பு - அனைவரது சடலங்களையும் தோண்டி எடுக்க நீதிமன்றம் அனுமதி

 
2019 ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி சாய்ந்தமருது வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் பூதவுடல் கள் நாளை (27) தோண்டி எடுக்கப்படவுள்ளது.


இதன்படி ,தற்கொலை தாக்குதலில் உயிரிழந்த 17 பேரில் சாரா ஜாஸ்மின் என்கிற புலஸ்தினி மகேந்திரன் உள்ளாரா என்பதை அறியவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


சஹரான் ஹாஷிமின் சகோதரர் மொஹமட் ரில்வான் தற்கொலை அங்கியை வெடிக்கச் செய்ததில் குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் அறிவித்தனர்.


அதன்படி அந்த நேரத்தில் டி.என்.ஏ. சோதனைகள் சம்பவ இடத்தில் சாரா ஜாஸ்மின் இருப்பதை உறுதிப்படுத்தவில்லை.


இதற்கமைய ,முந்தைய இரண்டு முறை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சாரா ஜாஸ்மினுடைய டி.என்.ஏ ஒத்துபோகாததை அடுத்து எச்சங்களை மீண்டும் ஒருமுறை தோண்டி எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


மேலும் இந்நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்களை நாளை (27) அம்பாறை மயானத்தில் தோண்டி எடுக்க பொலிஸாருக்கு கல்முனை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.