பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ பதவி விலகமாட்டார்

 


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்னும் பெரும்பான்மையான பாராளுமன்ற ஆசனங்களைக் கொண்டிருப்பதால், பிரதமர் பதவியில் இருந்து விலகப் போவதாக எந்தவொரு குழுவிற்கும் அறிவிக்கவில்லை என பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளனர்.


அதன்படி ,SLPP கட்சி உறுப்பினர்கள் மற்றும் சுயேச்சை மற்றும் மதக் குழுக்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரதமர் ராஜினாமா செய்வது பற்றி விவாதிக்கவில்லை என்றும், இந்த கூற்றுக்கள் தவறானவை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 120 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிப்பதாகவும் பிரதமர் பதவி விலகவுள்ளதாக சில குழுக்களுக்கு அறிவித்துள்ளதாகவும் இன்று காலை ஊடகங்களுக்கு தெரிவித்த உதய கம்மன்பிலவின் கூற்றுக்கு பதில் வழங்கியபோதே ராஜபக்ஷவின் அலுவலக சிரேஷ்ட அதிகாரிகள் இதனை தெரிவித்தனர்.


மேலும் எவ்வாறாயினும், இந்த கூற்றுக்கள் பொய்யானவை என்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை தவறாக வழிநடத்த கம்மன்பில மேற்கொண்ட முயற்சி இது என்றும் பிரதமர் அலுவலகத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.