நாட்டில் இன்னும் எத்தனை நாட்களுக்கு தேவையான எரிபொருள் உள்ளது தெரியும்? அதிர்ச்சி தகவலை வெளியிட்ட வலுசக்தி அமைச்சர்.எதிர்வரும் 10 நாட்களுக்கு அவசியமான பெற்றோல் கையிருப்பில் இருப்பதுடன், அடுத்த 14 நாட்களுக்கு தேவையான டீசல் கையிருப்பில் இருப்பதாகவும் வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
இன்று (20) இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு படிப்படியாக தவிர்க்கப்பட்டு வருகின்றபோதும், எரிபொருள் போக்குவரத்தில் இன்னும் சிக்கல்கள் இருப்பதாக அவர் சபையில் ஒப்புக்கொண்டார்.
இதேவேளை, எரிபொருள் போக்குவரத்து சேவையில் இருந்து இன்று முதல் தாம் விலகுவதாக எரிபொருள் தாங்கி ஊர்திகள் சங்கம் தெரிவித்துள்ளது.