சர்வகட்சி அரசாங்கத்திற்கான SJBயின் நிபந்தனையுடன் நாமலுக்கு ஹர்ஷ பதில்


அனைத்துக் கட்சிகளின் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நிபந்தனையை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா வகுத்துள்ளார்.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால், 113+ பெரும்பான்மையுடன் ஐக்கிய மக்கள் சக்தி இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் என கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.


நாட்டு மக்கள் கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோருகின்றனர். அவர்களின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். தற்போது நாட்டு மக்கள் #GoHomeGota என்றே கூறுகின்றனர். எனவே ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் இனியும் ஆட்சி புரிவதற்கான தார்மீக நியாயத்தை இழந்துவிட்டதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.


முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு அனைத்து பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து குறிப்பிட்ட காலத்திற்கு அரசாங்கத்தை அமைப்பதற்கு பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags