சிறுமி ஆயிஷாவின் மரணம் தொடர்பில் 29 வயது நபர் ஒருவர் கைது ; காவல்துறை தெரிவிப்பு.


பண்டாரகம - அட்டுலுகம பிரதேசத்தில் 9 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் 29 வயது  சந்தேக நபர்


ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.


அத்துடன்  உயிரிழந்த  9 வயது சிறுமியின் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதுடன்  இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.


சந்தேக நபர் சிறுமியை  கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர். 


மேலும், பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளனர்.


மேலும் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் சிறுமியின் மரணம் தொடர்பில் பல்வேறு பிரிவுகளில்  விசாரணைகள் இடம் பெற்றுவருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹல் தல்துவ தெரிவித்துள்ளார்.


அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை சுமார் 20 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


குறித்த சிறுமி கடந்த 27  ஆம் திகதி காணாமல் போயிருந்த நிலையில் நேற்று முன்தினம் ஜனாஸாவாக   மீட்கப்பட்டார்.


சிறுமியின் வீட்டின்  அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் புதையுண்ட நிலையில் உடல்  பிரதேச மக்களால் கண்டெடுக்கப்பட்டது.


இதனைத் தொடர்ந்து, சிறுமியின் உடல்   பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து இன்று பிரதே பரிசசோதனை இடம்பெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.