தடுமாறும் இலங்கையும், திணறும் அரசாங்கமும் ஜனாதிபதியும்...!

 கடந்த 2020ம் ஆண்டு பல மக்களின் எதிர்பார்ப்புகளை மிஞ்சி தனி பெரும்பான்மை மக்களின் வாக்குகளை சூரையாடி இலங்கை திருநாட்டிற்கு ஜனாதிபதியாக வந்தவர் எமது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள். 


தான் பொறுப்பேற்ற நாள் முதல் சிறுபான்மை மக்களை உதறித்தள்ளி தற்போக்கு சிந்தனையை வெளிப்படையாகவே வெளிக்கொண்டு வந்தார் ஜனாதிபதி. 


தொடர்ந்து வந்த நாடாளுமன்ற தேர்தலில் பலமான அரசாங்கம் ஒன்றையும் அமைத்து நாட்டை கொண்டு செல்வார் என நினைத்தோம். "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" எனும் தொனியில் தான் செய்தவைகளுக்கு பரிகாரமாக தொடர்ச்சியாக நாட்டின் நிலைமை அல்லோலகல்லோலமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. 


கொரோணா எனும் கொடிய தொற்று நோயில் உலக நாடுகளே ஸ்தம்பித்த நிலையில், உலக நாடுகளின் விஞ்ஞான அறிவையும் தாண்டி இலங்கை அதீத அறிவுடைய அறிஞர்களின் மூளையை நம்பி பச்சிளம் குழந்தையை எறித்து நாட்டை ஆட்சி செய்ய முன்வந்த போதே தான் ஒரு தோல்விடைய தலைவன் என்பதனை நிரூபித்தார். 


தொடர்ந்து வந்த சிக்கலான பொருளாதார நடவடிக்கையினால் இன்று முழு நாடுமே சின்னாபின்னமாகி இருக்கின்றன. அத்தியாவசிய பொருளில் ஆரம்பித்து சமையல்கட்டு வரை பொதுமக்களில் வாழ்வாதாரத்தில் இடியை விழ வைத்துள்ளார் சனாதிபதி. 


இன்றைய இந்த பொருளாதார சிக்கல் நிலைமை நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களில்தான் தாக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றன. தனக்கு வாக்களித்த மக்களே தனக்கு எதிராக போர்களம் அமைக்க வித்திட்டவர்தான் இந்த சனாதிபதி. 


ஆரம்பத்தில் சிறுபான்மை பிரதிநிதிகளையும் கட்சிகளையும் பொடுபோக்குத்தனமாக நினைத்து தலைக்கணம் கொண்டு செயற்பட்டமையினால் இலங்கை அரசாங்கத்திற்கு முஸ்லிம் நாடுகளே உதவி செய்ய முன்வரவில்லை. 


மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தும் பலமில்லாத அரசாங்கமாகவே காணப்படுகின்றது. கிழைமைக்கு கிழமை அமைச்சர்கள் மாறுகின்றனர். 


இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, மத்திய வங்கி ஊடாக காசடித்து விளையாடி இன்று அந்நிய நாடுகளின் பணத்தின் பெறுமதியை உயர்த்தி வைத்துள்ளார் அதிமேதகு ஜனாதிபதி. இதனால் துறைமுகத்தில் உள்ள சரக்கு கப்பல்களில் உள்ள பொருட்களை வெளியே எடுக்க முடியாமல் கப்பலுக்கு வரி செலுத்தவே நேரம் உள்ளன. ஆனால் அன்றாட அத்தியாவசிய பொருட்களை எதிர்பார்த்த மக்கள், விலைவாசி உயர்வால் சாகும் நிலைமையில். 


தனக்கு பலமான அரசியல் அதிகாரம் வழங்கியும் தன்னால் இயன்றவற்றை செய்ய முடியாமல் வங்குரோத்து அரசியல் செய்யும் கெளரவ ஜனாதிபதி அவர்களே, உங்களால் முடியாவிட்டால் உடனடியாக நாட்டு மக்களின் நலவிற்காக நாட்டை வேறு ஒருவரிடம் வழங்க முன்வாருங்கள். வாய் வாதத்தில் கூட நீங்கள் சிறந்தவர் இல்லை என்பதனை நிரூபித்துக் கொண்டுதான் இருக்கின்றீர்கள். 


எதிர்கட்சிகளினால் ஒழுங்கு செய்யப்பட்ட அரசு எதிர்ப்பு போராட்டங்களை பார்க்கும் போது உங்கள் மீதும், உங்கள் அரசாங்கம் மீதும் மக்களின் அதிருப்தியை பார்க்க முடிகின்றது. 


ஏன், உங்களை ஆட்சிக்கு கொண்டு வந்த அரசியல்வாதிகளே இன்று உங்களுக்கு எதிராக. 


இனிமேலும் நீங்கள் நாட்டை முன்னேற்ற இயாலாமையில் உள்ளீர்கள். தயவுசெய்து நாட்டு மக்களிற்காக உங்கள் அரசியலை மூட்டை கட்டி ஒரு மூலையில் வைத்து விடும். 


நன்றி. 


அமீர் அப்னான்,

இ.பா.உறுப்பினர்

இலங்கை.