நீர் கட்டணம் குறித்து வெளியான

 

எதிர்வரும் காலங்களில் நீர் கட்டணங்களை குறுந்தகவல் முறையிலோ அல்லது மின்னஞ்சல் ஊடாகவோ பெற்றுக்கொடுப்பதற்கு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது.


நாட்டில் ஏற்பட்டுள்ள கடதாசி தட்டுப்பாடு காரணமாக இவ்வாறு மாற்று வழிகளில் நீர் கட்டணங்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் தெரிவித்தார்.