நாட்டை வந்தடைந்த இலங்கை கால்பந்தாட்ட அணியின் புதிய வெளிநாட்டு பயிற்சியாளர்கள்எஸ்.ஜே.பிரசாத்


இலங்கை கால்பந்தாட்ட அணிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயிற்சியாளர்கள் நேற்று இலங்கை வந்தடைந்தனர்.


இலங்கை கால்பந்தாட்ட அணியின் தலைமைப் பயிற்சியாளரான மன்செஸ்டர் சிட்டியின் முன்னாள் வீரரான இங்கிலாந்தின் அன்ட்ரூ மொரிசன் மற்றும் உதவிப் பயிற்சிப்பாளரான அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கீத் ஸ்டீவன்ஸ் ஆகியோர் நேற்று மாலை நாட்டுக்கு வந்தடைந்தனர்.


இரண்டு பயிற்சியாளர்களையும் இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணியின் முகாமையாளர் ஹிரன் ரத்நாயக்க மற்றும் இலங்கைக் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் போட்டிகளின் தலைவர் ஆசிப் அன்சார் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வரவேற்றனர்.