ஒரு சில தினங்களில் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு தீர்வு


நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சினைக்கு ஒரு சில தினங்களில் தீர்வு வழங்குவதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


மேலும் தற்போது, முத்துராஜவெல மற்றும் கொலன்னாவை ஆகிய முனையங்களுக்கு எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.