போதியளவுஎரிவாயு கையிருப்பு இல்லை என அறிவிப்பு

உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை வழங்குவதற்கு போதியளவு எரிவாயு கையிருப்பு இல்லை என லிட்ரோ நிறுவனம் இன்று (08) தெரிவித்துள்ளது. 


இன்றைய தினம் விடுமுறை நாளாக இருந்தாலும், முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு முனையம் மட்டுப்படுத்தப்பட்ட உள்நாட்டு எரிவாயு விநியோகத்தை வழங்கியுள்ளது. 


லிட்ரோ நிறுவனத்திடம்  வினவியபோது, ​​உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை வெளியிடுவதற்கு தங்களிடம் கையிருப்பு இல்லை என்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிவாயு வழங்குவதாகவும் தெரிவித்தனர். 


இந்நிலையில், பல பகுதிகளில் உள்ள மக்கள் எரிவாயு வழங்கக் கோரி முக்கிய சாலைகளை மறித்து இன்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.