மூன்று அமைச்சுக்களின் செயலாளர்கள் மீண்டும் அதே பதவிகளுக்கு நியமனம்பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுகளுக்கான செயலாளர்கள் மீண்டும் அதே பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஓய்வுப் பெற்ற மேஜர் கமல் குணரத்னவும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஓய்வுப்பெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் டி அல்விஸும், நிதியமைச்சின் செயலாளராக மஹிந்த சிறிவர்த்தனவும் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், நேற்று (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.