சஜித்தின் கோரிக்கையை நிராகரித்த கோட்டாபய! ரணில் பிரதமர் ஆவது உறுதிதனக்கு பிரதமர் பதவியை வழங்குமாறு இன்று பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.


எனினும் இந்த கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.


நாடு நெருக்கடியான நிலையில் இருப்பதால் பிரதமர் பதவியை ஏற்குமாறு கோரிக்கை விடுத்த போதிலும் அதனை ஏற்காத நிலையில், பிரதமர் பதவியை ஏற்க ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுத்ததாகவும் இன்று மாலை சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


அத்துடன் தான் வழங்கிய வாக்குறுதியை மீற முடியாது எனவும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபித்து பிரதமர் பதவியை பெற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி கூறி முடித்துள்ளார்.