நாட்டில் குறைந்த அளவிலான டீசல் மட்டுமே கையிருப்பில்


இலங்கையில் தற்போது குறைந்த அளவிலான டீசல் மட்டுமே கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் டேங்கர் உரிமையாளர்கள் சங்கம் இன்று தெரிவித்துள்ளது.

நாட்டில் டீசல் தட்டுப்பாடு நிலவுவதாக குறித்த சங்கத்தின் இணைச் செயலாளர் டி.வி.சாந்த சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

கொலொன்னாவ மற்றும் முத்துராஜவெல சேமிப்பு முனையங்களில் போதுமான அளவு பெற்றோல் இருப்பு உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள கையிருப்புகளின் படி, அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு போதுமான பெற்றோல் உள்ளதாகவும், இன்றும் நாடு முழுவதும் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.