நிதி அமைச்சராக பிரதமர் ரணில் நாளை பதவியேற்பு! ?

 
நிதி அமைச்சு பதவியும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளதென அறியமுடிகின்றது.


இதன்படி புதிய நிதி அமைச்சராக, ரணில் விக்கிரமசிங்க நாளை பதவியேற்பார் என தெரியவருகின்றது.

 

நிதி அமைச்சு பதவியை ஏற்பதற்கு, அலிசப்ரியும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.


இந்நிலையிலேயே, நிதி அமைச்சு பதவி பிரதமர் வசமாகவுள்ளது.