துமிந்தவிற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை இடைநிறுத்த உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு


துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை இடைநிறுத்த உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுமன்னிப்பை வழங்கியிருந்தார்.

ஹிருணிகா மற்றும் அவரது தாயாரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அத்தோடு துமிந்த சில்வாவின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் இன்று (31) உத்தரவு பிறப்பித்துள்ளது.