வார இறுதி நாட்களில் கொழும்பு பகுதிகளில் நீர் வெட்டு தொடரும் அவலம் ..!கொழும்பின் சில பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை (21) 10 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.அதற்கமைய, கொழும்பு 12, 13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.இந்நிலையில், குறித்த காலத்தில் கொழும்பு 1 மற்றும் 11 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.