மொரட்டுவை நகர முதல்வர் சமன் லால் கைது


காலிமுகத்திடல் தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்த மொரட்டுவை நகர முதல்வர் சமன் லால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த 9ஆம் திகதி அலரி மாளிகைக்கு முன்பாகவும், காலிமுகத்திடலிலும் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னக்கோனிடம், குற்றப் புலனாய்வு திணைக்களம் நேற்று சுமார் 10 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.