முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை தாக்கி சேதப்படுத்திய பிக்கு உட்பட நால்வர் கைது


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை தாக்கி சேதப்படுத்திய குற்றச்சாட்டில் பௌத்த பிக்கு ஒருவர் உட்பட நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


குறித்த சந்தேகநபர்கள் எஸ்.எம்.சந்திரசேன, சன்ன ஜயசுமன மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரின் வீடுகளை தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இது தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்தே இவ்வாறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.