காஷ்மீர் பல்கலைக்கழகத்திற்கு முதல் பெண் துணைவேந்தர் நியமனம்



காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் நிலோபர் கானை ஜம்மு காஷ்மீர் ஆளுநர் லெப்டினன்ட் மனோஜ் சின்ஹா நியமித்துள்ளார்.


காஷ்மீர் மற்றும் ஜம்மு பல்கலைக்கழகங்கள் சட்டம், 1969 இன் பிரிவு 12 இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.


இதன் பிரகாரம் பேராசிரியர் நிலோபர் கான் அடுத்து வரும் 3 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார்.


பேராசிரியராகப் பணியாற்றிய நிலோஃபர் கான், பிரீமியர் நிறுவனத்தில் நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி என்பதும் குறிப்பிடத்தக்கது.


பேராசிரியர் நிலோஃபர் பதிவாளராகப் பணிபுரிந்துள்ளார் மற்றும் காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் மேம்பாட்டு பேரவையின் தலைமை பதவியையும் வகித்துள்ளார். ஒரு ஆராய்ச்சியாளராகவும் நீண்ட காலம் பணிப்புரிந்துள்ளார்.


ஸ்ரீநகர் மாவட்டத்தின் பருவ வயதுப் பெண்களின் (13-18 வயது) உணவுப் பழக்கம் மற்றும் செயல்பாட்டு முறை குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்து ஆய்வறிக்கையும் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.