அமெரிக்காவில் கலாநிதிப் பட்டம் பெற்றார் Dr.ஸஹ்ரா!

 




அக்குறணையைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்று தனது ஊருக்கு  கண்ணியத்தையும் கௌரவத்தையும் பெற்றுக் கொடுத்துள்ளார் Dr.பாத்திமா ஸஹ்ரா ஆப்தீன். 


அமெரிக்காவின் மிஸூரி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (Missouri University of Science and Technology, MUS&T)தனது கலாநிதி பட்டப் படிப்பை புள்ளிவிபரவியலை பிரதானமாகக் கொண்ட கணிதப் பாடத்திட்டத்தைப் பூரணப்படுத்தியதன் மூலம் பாத்திமா ஸஹ்ரா தனது  கல்வி வாழ்க்கையின் உச்சத்தை எட்டியுள்ளார்.


பாத்திமா ஸஹ்ரா ஆப்தீன் அக்குறணை மல்வானாஹின்னையில் கல்விப் பின்புலத்தைக் கொண்ட இவர் அல் ஹாஜ் எம்.எம். ஸெய்னுல் ஆப்தீன் மற்றும் அல் ஹாஜா திருமதி G.S.M.சித்தி பௌஸுல் ஹினாயா அவர்களின் சிரேஷ்ட புதல்வியாவார்.