இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு பெட்ரோல் இருக்காது ! வரியையில் நிற்க வேண்டாம்


இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு பெட்ரோல் இருக்காது ! வரியையில் நிற்க வேண்டாம் 


தற்போது நாட்டில் டீசல் தட்டுப்பாடு இல்லை எனவும் நாடு பூராகவும் டீசல் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் எரி சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பாராளுமன்றில் குறிப்பிட்டார்.


ஆனால் இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு பெட்ரோல் இருக்காது எனவும் மக்கள் நீண்ட வரியையில் நிற்க வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.


இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ள பெட்ரோல் கப்பலுக்கு பணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


தற்போது கையிருப்பில் சிறிய அளவிலேயே பெட்ரோல் இருப்பதால் அத்திய அவசிய சேவைகளுக்காக மாத்திரம்  பெட்ரோல் விநொயோகிக்கப்படுதாவும் குறிப்பிட்ட அமைச்சர் இன்னும் மூன்று நாட்களில் பெற்றோல் விநியோகம் சீராகும் என தாம் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.


பெட்ரோல் தட்டுப்பாடு காரணமாக தொழில் செய்ய முடியாமல் தவிக்கும் முட்சக்கர வண்டி ஓட்டுனர்களுக்கு தனது வருத்தத்தை தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.