O/L பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு 17 நள்ளிரவு முதல் தடை...



க.பொ.த சாதாரண தர பரீட்சையுடன் தொடர்புடைய கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு எதிர்வரும் 17ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 


கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை, எதிர்வரும் 23 ஆம் திகதி முதல், ஜூன் மாதம் முதலாம் திகதிவரை நடைபெறவுள்ள நிலையிலேயே இவ்வறிவித்தலை அவர் வெளியிட்டுள்ளார்.


சாதாரணதரப் பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.


இந்த தடை உத்தரவை மீறினால் பரீட்சை சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.