கடலலையில் அடித்துச் செல்லப்பட்டு மாயமான மாணவர்களின் சடலங்கள் மீட்பு...


அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள கடற்கரைப்பகுதியில் கடந்த 10 ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் கடலலையில் அடித்துச் செல்லப்பட்டு மாயமான இரண்டு மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டள்ளன. 


மருதமுனை அல்மனார் தேசிய பாடசாலை மாணவர்களான முகமது பைரூஸ் வசீம் ஜெசீத் மற்றும் உபைத்துல்லாஹ் அத்தீஸ் அகமட் ஆகியோரது சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. 


கடல் வழமைக்கு மாறாக கொந்தளிப்பாக காணப்பட்ட நிலையில் அதனையும் பொருட்படுத்தாது கடல் நீச்சலில் ஈடுபட்டிருந்தபோது, 3 மாணவர்கள் கடலலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், இரு மாணவர்கள் மாயமாகியுள்ளனர். அன்றைய தினம் (10) கடற் தொழிலாளர்களால் ஒரு மாணவர் மீட்கப்பட்டு கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிப்பட்டிருந்தார்.

 


பின்னர் காணாமல்போன இரு மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு மருதமுனை பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு மரண விசாரணை அதிகாரி முகமட் இப்றாகீம் நஸ்ரூன் இஸ்லாம் முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்ற பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.