பிள்ளையான் வெளிநாடு சென்றார்..?


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுறை சந்திரகாந்தன், வெளி​நாடொன்றுக்குச் சென்றுவிட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


த.ம.வி.புலிகளின் ஊடகப் பேச்சாளர் ஆர்சாத் மௌலானாவுக்கும் பிள்ளையானுக்கும் இடையே ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக ஆர்சாத் மௌலானா, ஐரோப்பிய நாடொன்றுக்கு சென்றுவிட்டாரென தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு எதிரான சாட்சியாக ஆர்சாத் மௌலானா மாறியதால் அக்கட்சியின் தலைவர் பிள்ளையான் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில், கடந்த 9 ஆம் திகதி மலேசியாவுக்கு பிள்ளையான் தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.