இன்று 10 சதவீதமான தனியார் பஸ்கள் மாத்திரமே சேவையில்

தற்போதைய நெருக்கடி நிலைக்கு மத்தியில், இன்றைய தினம் நாடளாவிய ரீதியில், 10 சதவீதமான தனியார் பஸ்கள் மாத்திரமே சேவையில் ஈடுபட உள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.


எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி தொடக்கம் அமுலாகும் வகையில், பஸ் கட்டணத்தை 30 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கான பரிந்துரைகள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால், இன்றைய தினம் போக்குவரத்து அமைச்சு அனுப்பிவைக்கப்படவுள்ளன.