இலங்கையில் நள்ளிரவு முதல் தொலைத் தொடர்பு சேவை வரி 15% ஆக அதிகரிப்பு : ரீலோட், பிற்கொடுப்பனவு பொதிகளுக்கான கட்டணங்களில் மாற்றம்


இன்று நள்ளிரவு (04) முதல் அமுலுக்கு வரும் வகையில் தொலைத் தொடர்பு சேவை வரி 11.25% இலிருந்து 15% ஆக அதிகரிக்கப்படுவதாக, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


இதேவேளை, ஜூன் 01ஆம் திகதி முதல் பெறுமதி சேர் (VAT) வரி 8% இலிருந்து 12% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இருப்பினும், இணைய பொதிகளுக்கான கட்டணங்களுக்கு தொலைத் தொடர்பு வரி பொருந்தாது என்பதுடன், அதிகரிக்கப்பட்ட 4% VAT சேர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


அதற்கமைய, தொலைபேசிக் கட்டணங்கள் இன்று நள்ளிரவு (04) முதல் அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


அந்த வகையில் Dialog நிறுவனம் அதன் முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு கட்டணங்கள் மற்றும் பொதிகளுக்கான மீள் நிரப்பல் தொகைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படுவதாக அறிவித்துள்ளது.