கடவுச்சீட்டு வழங்கும் “ஒருநாள் சேவை” மேலும் 3 மாவட்டங்களில் ஆரம்பம்


கடவுச் சீட்டு வழங்கும் ஒருநாள் சேவையை மேலும் மூன்று மாவட்டங்களுக்கு விஸ்தரிக்கவுள்ளதாக அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை (4) தொடக்கம் மாத்தறை, கண்டி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் கடவுச்சீட்டு வழங்கும் ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.