45%க்கு மேல் அதிகரித்தது நாட்டின் பணவீக்கம்

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மூலம் கணக்கிடப்பட்ட மே மாதத்துக்கான பணவீக்கம் 45.3% ஆக அதிகரித்துள்ளது என்று தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிக்கையிட்டுள்ளது.


தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணுக்கு அமைய 2022 மார்ச் மாதம் 21.5% ஆக இருந்த பணவீக்கம் 2022 ஏப்ரலில் 33.8% ஆக அதிகரித்திருந்த நிலையில் மே மாதத்தில் 45.3% ஆக அதிகரித்துள்ளது.

 

இதேவேளை, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, உணவுப் பணவீக்கம் 58 சதவீதமாகவும், உணவு அல்லாத பிரிவின் வருடாந்த பணவீக்கம் 34.2 சதவீதமாகவும் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.