பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆரச்சியின் மகன் மற்றும் மருமகள் கைது


ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆரச்சியின் மகன் மற்றும் மருமகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


அதிவேக நெடுஞ்சாலையின் பெதிகம நுழைவாயிலுக்கு அருகில் வைத்து அண்மையில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததன் காரணமாக குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 


இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.