இறக்குமதி செய்யப்படும் பொருட்களை விநியோகிப்பதில் சிக்கல்!


இறக்குமதி செய்யப்படும் பொருட்களை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

 

எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான முறையான பொறிமுறை இல்லாததே இந்த பிரச்சினைக்கு பிரதான காரணம் என அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்துள்ளார்.