மேலும் மரக்கறிகளின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம்


நாட்டில் மரக்கறி வகைகளின் விலைகள் தொடர்ந்தும் அதிகரிக்கும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது.


எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு மரக்கறி வகைகள் கிடைக்கப்பெறாமையே இதற்கு காரணமாகும்.

 

இதன் காரணமாக பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறி வகைகளின் விலைகள் தற்போது அதிக விலையிலேயே விற்பனை செய்யப்படுவதாக மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றன.


தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக மரக்கறி வகைகளின் விலைகள் மேலும் அதிகரிக்கலாம் எனவும்  சுட்டிக்காட்டப்பாட்டுள்ளது.