பிரசன்ன ரணதுங்கவுக்கு சிறைத் தண்டனை


வர்த்தகர் ஒருவரிடமிருந்து 64 மில்லியன் ரூபா கப்பம் பெற்ற குற்றச்சாட்டில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இன்று (6) உத்தரவிட்டுள்ளார்.


வர்த்தகர் ஒருவரிடமிருந்து 64 மில்லியன் ரூபா கப்பம் பெற்ற சம்பவம் தொடர்பில் உறுதிமொழிப் பத்திரத்தில் கையொப்பமிட்டமை தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றவாளி என உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளது.


மேலும் மனுதாரருக்கு 25 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


மற்றைய அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் பிரதிவாதி விடுவிக்கப்பட்டதோடு, ஏனைய பிரதிவாதிகளை அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.