உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்தார் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று (6) அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு கொடுக்கப்பட்ட வழக்குத் தீர்ப்பு சம்பந்தமாக மேன் முறையீடு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.


அமைச்சருக்காக வழக்கறிஞர் திருமதி மேரி டிக்மன், உயர் நீதிமன்றத்தின் பதிவாளரிடம் இன்று (07) இந்த மேன்முறையீட்டை ஒப்படைத்துள்ளார்.


அதை மேன்முறையீட்டு நீமன்றத்துக்கு கையளிக்குமாறு அதனூடாக விண்ணப்பித்துள்ளார்.


2015 ஆம் ஆண்டு கொலன்னாவை மீதொட்டமுல்லை சதுப்பு நிலம் ஒன்றை மண் நிரப்பி தங்கியிருந்த சட்ட விரோதக் குடியிருப்பாளர்களை அகற்றிய சம்பவத்துடன் தொடர்புபட்டு 15 குற்றச்சாட்டுகளுக்காக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவி மொரின் ரணதுங்க, நரேஷ் குமார் பாரிக் எனும் நபர்களுக்கிடையே இந்த வழக்குத் தொடரப்பட்டிருந்தது.


7 வருடங்களாக நீடித்த இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு கொழும்பு உயர் நீதிமன்றத்தின் நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்த வழக்கின் தீர்ப்பை நேற்று (06) வழங்கியிருந்தார்.


அதில் 15 குற்றச்சாட்டுகளுள் 14 குற்றச்சாட்டுகளில் இருந்து அமைச்சரை விடுவித்துள்ள அதேநேரம் இரண்டாவது சந்தேக நபரான அமைச்சரின் மனைவி மொரின் ரணதுங்க மற்றும் நரேஷ் குமார் பாரிக் ஆகியோர் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டனர்.


இதில் 13 ஆவது குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டிற்கு மட்டுமே அமைச்சருக்கு 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனை ஒன்று வழங்கப்பட்டுள்ளது.


இன்று (07) அமைச்சருக்காக அவரது வழக்கறிஞர் திருமதி மேரி டிக்மன் அவர்கள் உயர் நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைத்த் மேன்முறையீட்டு விண்ணப்பத்தின் மூலம் அந்த 13 ஆவது குற்றச்சாட்டுக்கு அமைச்சரை குற்றவாளியாக்கி இருப்பதை அந்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்குமாறு விண்ணப்பித்துள்ளார்.


அந்தக் குற்றச்சாட்டை நீக்க முடியாது என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்தால் கொடுக்கப்பட்டுள்ள தண்டனையைக் குறைக்குமாறும் இந்த விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ளது.


பிரதீப் அனுர குமார ஊடகச் செயலாளர்