போயா தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகள், இறைச்சி கடைகள் மூடப்படும்(எம்.மனோசித்ரா)


பொசொன் போயா தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியிலுள்ள சகல மதுபானசாலைகள் மற்றும் களியாட்ட விடுதிகளை மூடுமாறு பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.


அத்தோடு பல்பொருள் அங்காடிகளிலும் அன்றைய தினம் மதுபான விற்பனையைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.


மேலும் அன்றைய தினத்தில் இறைச்சி விற்பனை கடைகளை மூடுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.


பல்பொருள் அங்காடிகள் மற்றும் ஏனைய விற்பனை நிலையங்களில் அன்றைய தினம் இறைச்சிக்காக விலங்குகளை வெட்டுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் , விற்பனை செய்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.