இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு புதிய தலைவர் தெரிவு


இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு புதிய தலைவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


அதன்படி, புதிய தலைவராக விசேட வைத்திய நிபுணர் கலாநிதி தர்சன சிறிசேன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


அண்மையில் நடைபெற்ற 95 ஆவது பொதுச் சபையில் அவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டது.


அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கலாநிதி அனுருத்த பதெனிய 11 வருடங்கள் அந்தப் பதவியை வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..