நாட்டின் பொருளாதாரம் குறித்து உலக வங்கி எச்சரிக்கை!

மின்சாரம், உணவு, எரிபொருள் தட்டுப்பாடுகளுடன் கடுமையாக போராடிக்கொண்டிருக்கும் இலங்கையின் பொருளாதாரம், இவ் வருடம் 7.8 வீதத்தினால் வீழ்ச்சியடையுமென உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.


பொருளாதாரத்தை மோசமாக கையாண்டதன் காரணமாக இலங்கையின் வரலாற்றில் என்றும் இல்லாதாவாறு அந்நியசெலாவணி முற்றாக முடிவடைந்துள்ளதால் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக – 2024ஆம் ஆண்டளவிலேயே இலங்கையின் பொருளாதார வளர்ச்சி சாதகமான நிலையை நோக்கி முன்னேறுமென உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

 

2023 இல் இலங்கையின் பொருளாதாரம் 3.7வீதத்தினால் வீழ்ச்சியடையுமென உலக வங்கி கணித்துள்ளது.


வெளிநாட்டுக் கடன்கொடுப்பனவு நிறுத்தப்பட்டமை உட்பட பல காரணங்களால் இலங்கையின் வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சியடைந்துள்ளன. இலங்கையின் வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் அதிகளவு நிச்சயமற்றவையாகவும், குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஆபத்தை கொண்டவையாகவும் காணப்படுகின்றதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.