சிறுவர்கள் மத்தியில் பரவி வரும் புதிய வைரஸ்


இந்த நாட்களில் சிறுவர்கள் மத்தியில் பரவி வரும் கை, கால், வாய் தொடர்பான வைரஸ் நோய் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மேல் மாகாண முன்பள்ளிப் பிரிவின் பணிப்பாளர் மஹிந்த கொடித்துவக்கு முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பள்ளியில் HAND – FOOT AND MOUTH வைரஸ் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக உள்ளூர் சுகாதார அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்குமாறு பணிப்பாளர் முன்பள்ளி ஆசிரியர்களிடம் மேலும் கேட்டுக்கொண்டார்.