அரச ஊழியர்கள் வெளிநாடு செல்ல 'No Pay' விடுமுறை


தொழில்வாய்ப்பு அல்லது தனிப்பட்ட காரணங்கள் நிமித்தம் வெளிநாடு செல்ல விரும்பும் அரச ஊழியர்களுக்கு ஐந்தாண்டு கால ஊதியமற்ற விடுமுறை வழங்குவதற்கான திட்டம் முன்மொழியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் அமைச்சர் தினேஷ் குணவர்தன.
நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியை அடைந்துள்ள நிலையில் அரச ஊழியர்களுக்கான ஊதியத்தை வழங்குவதற்கு புதிதாக பணம் அச்சிடப்பட்டு வருகிறது. இப்பின்னணியில், இவ்வாறான திட்டத்தை அரசாங்கம் முன்வைத்துள்ளது.
2018 ஒக்டோபரில் மைத்ரிபால சிறிசேன உருவாக்கிய ஆட்சிப் பிரளயத்தினால் 53 நாட்கள் பதவியிலிருந்த அரசாங்கத்தில், மிகச் சில நாட்களுக்குள் 4500 க்கு மேற்பட்டவர்களுக்கு விமல் வீரவன்ச, தனது அமைச்சினூடாக தொழில் வாய்ப்பு வழங்கியிருந்தமையும், பொதுவாகவே அரசாங்க தொழில்வாய்ப்புக்காகவே மக்கள் அரசியல் வாதிகளை ஆதரிக்கும் கலாச்சாரம் தொடர்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.