
உச்சத்தை தொட்ட வட்டி விகிதம் - அதிர்ச்சி அறிவிப்பு
அமெரிக்க மத்திய வங்கி கடந்த சுமார் 30 ஆண்டுகளில் இல்லாத அளவு வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது.
கடன் வாங்குவதற்கான வட்டி வகிதம் 0.75 (முக்கால்) விழுக்காட்டுப் புள்ளிகள் கூடியுள்ளன.
அதிகரிக்கும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அண்மையில் அமெரிக்காவில் உணவு, எரிவாயு விலைகள் கடுமையாக உயர்ந்தன. அதனால் அமெரிக்கர்கள் பலர் அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தடுமாறுகின்றனர்.