காத்தான்குடியில் ஹேரோயினுடன் ஒருவர் கைது!

 

காத்தான்குடி பிரதேசத்தில் 8 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 25 கிராம் 250 மில்லிக்கிராம் ஹேரோயினுடன் போதைப்பொருள் வியாபாரி ஒருவரை  செவ்வாய்க்கிழமை (14) மாலை கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்துள்ளார்.


இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத்மாசிங்கவின் ஆலோசனைக்கமைய, குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தலைமையிலான, பொலிஸார் சம்பவதினமான நேற்று மாலை காத்தான்குடி கடற்கரை வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அருகாமையில் வைத்து போதை பொருள் வியாபாரி ஒருவரை சுற்றிவளைத்து சோதனையிட்டபோது, அவரிடமிருந்து 8 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா பெறுமதியான 25 கிராம் 250 மில்லிக்கிராம் ஹேரோயின் போதைப்பொருளை மீட்டதுடன் அவரை கைது செய்தனர்.


குறித்த நபர் காத்தான்குடியைச் சேர்ந்தவர் எனவும், இவர்  நீண்ட காலமாக போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளதாகவும், கல்முனையில் இருந்து காத்தான்குடிக்கு வியாபாரத்துக்காக ஹேரோயினை எடுத்து கொண்டு வந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது 


மேலும், இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.