மஜ்மா நகர் மக்களுக்கு தண்ணீர் தாங்கிகள் வழங்கி வைப்பு!

 

மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் வேண்டுகோளுக்கிணங்க, கட்சியின் பொருளாளர் ஹுஸைன் பைலாவின் முயற்சியில், மஜ்மா நகரில் வசிக்கும் குடும்பங்களுக்கு தண்ணீர் தாங்கிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று மாலை (15) இடம்பெற்றது.


முன்னாள் பிரதி அமைச்சர் ஹுசைன் பைலாவின் நண்பர்களான ராஜா செனவிரத்ன மற்றும் ஆர்.பி.விஜேசிரி ஆகியோரின் அனுசரணையிலேயே மேற்படி நீர் தாங்கிகள் வழங்கி வைக்கப்பட்டன.


மஜ்மா நகர் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் சமீமின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கோறளைப் பற்று மேற்கு பிரதேச சபை தவிசாளர் நெளபர், பிரதேச சபை உறுப்பினர்களான ஜெளபர், ஜெஸீமா, பள்ளிவாயல் தலைவர் முபாரக் மற்றும் இணைப்பாளர் றிஸ்மின் உட்பட பிரமுகர்களும் கலந்துசிறப்பித்தனர்.