கர்ப்பிணி தாய்மார்களுக்கான முக்கிய அறிவித்தல்!


தற்போதைய எரிபொருள் நெருக்கடியினால் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கான வசதிகள் இல்லாத கர்ப்பிணித் தாய்மார்கள், பிரசவ திகதிக்கு சுமார் 15 நாட்களுக்கு முன்னதாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டுமென மகப்பேறு மற்றும் பெண் நோயியல் நிபுணர்கள் நிறுவகம் தெரிவிக்கின்றது.


வீட்டில் பிரசவம் செய்வது தாய்க்கும் பிறந்த குழந்தைக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.