சம்பளம் இன்றி வேலை செய்ய அனைத்து அமைச்சர்களும் இணக்கம்


ஓராண்டுக்கு சம்பளம் இல்லாமல் வேலை செய்வதற்கு அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும்

  ஒப்புக்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.


இந்த விடயம் தொடர்பில் பிரதமரினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அனைத்து அமைச்சர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.


நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.