ரிஷாத் பதியுதீனின் மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு திகதி குறிப்பு!


வில்பத்து, கல்லாறு பிரதேசத்தில் காடுகளை அழித்து நிர்மாணிக்கப்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் மீண்டும் மரங்களை நடும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளார்.


தமக்கு எதிரான மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை இரத்துச் செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மேல்முறையீட்டு மனுவை செப்டம்பர் 5 ஆம் திகதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.