மீண்டும் பயங்கரம் - யாழில் சிறுமி ஒருவர் மாயம்


செந்தூரன் பிரதீபன்


யாழ்ப்பாணம் - வேலணை, சரவணை பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார்.


குறித்த சிறுமி தனியார் வகுப்பிற்குச் சென்ற நிலையில், காணாமல் போயுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர். 


சம்பவம் தொடர்பில் சிறுமியின் உறவினர்கள் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.


இதையடுத்து காணாமல் போன சிறுமியை தேடும் பணியினை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். (R)