ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயத்தில்....

ஆடைத் தொழிற்சாலைகள் பல மூடப்படும் அபாயத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 


ஏறக்குறைய 200 சிறிய மற்றும் நடுத்தர ஆடைத் தொழிற்சாலைகள் இவ்வாறு மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


தொடர் மின்வெட்டு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு போன்ற பொருளாதார நெருக்கடியினால் தோன்றியுள்ள சிக்கல்களின் காரணத்தால் இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 


இவ்வாறு தொழிற்சாலைகள் இழுத்து மூடப்படுமாயின், அங்கு தொழில் புரிவோருக்கு தமது வேலைகளை இழக்க நேரிடுவதுடன், நாட்டில் வேலையற்றோர் பட்டாளம் உருவாகும்.