1000% உறுதியாக கூறுகிறேன்... ரணில் விக்கிரமசிங்க 140 இற்கு அதிக வாக்குகளைப் பெறுவார்.


புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான பாராளுமன்ற வாக்கெடுப்பின் போது பதில் ஜனாதிபதியும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க 140 அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெறுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.


தனது முன்னைய கணிப்புகள் ஒருபோதும் தவறாகப் போகவில்லை என்று கூறியுள்ள முன்னாள் எம்.பி., இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்படுவார் என்பதில் 1000% உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்ற வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளுடன் இலங்கை அராஜகத்தை நோக்கிச் செல்வதைத் தடுப்பதற்காக கலந்துரையாடியுள்ளதாக வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.


பாராளுமன்றத்தின் மூலம் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நாடு இயல்பு நிலைக்கு திரும்பும் என நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.