ரணில் 140 வாக்குகளைபெற்று அமோகமாக வெற்றிபெறுவார்-வஜிர அபேவர்தன
இடைக்கால ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பு ஜுலை 20 ம் திகதி நாடாளுமன்றத்தில் நடைப்பெறவுள்ள நிலையில், இவ்வாக்கெடுப்பில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுமார் 140 வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார் என முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ் எதிர்வு கூறலை வெளியிட்டுள்ளார்.

“ தற்போது நாட்டிற்குத் தேவையான விடயங்கள் குறித்து கட்சித் தலைவர் என்ற ரீதியில்யில் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடியுள்ளேன். நான் உணர்ந்த வரையில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறைந்தது 140 வாக்குகளை பெற்று அனைவரின் ஆசியுடன் ஆட்சிக்கு வருவார். 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இலங்கையை மிக உயர்ந்த இடத்திற்கு உயர்த்தி காட்டுவார். இதில் சந்தேகம் கொள்ள தேவையில்லை, அவரை நம்புங்கள், அவர் 50 வருட அனுபவமுள்ள அரசியல் தலைவர் எனவும் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.